ரூ.8 கோடியில் உருவாகும் தரமற்ற பேருந்து நிலையம் அதிமுக போராட்டம்!

ரூ.8 கோடியில் உருவாகும் தரமற்ற பேருந்து நிலையம் அதிமுக போராட்டம்!

அதிமுக போராட்டம்

சீர்காழியில் ரூ.8 கோடி 42 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணி தரமாக மேற்கொள்ளவில்லை என அதிமுக முன்னாள் எம்எல்ஏ தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதிய பேருந்து நிலையம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடியே 42 லட்சம் செலவில் சீரமைத்து மேம்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக பேருந்து நிலையத்தின் பழைய சிமென்ட் சாலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டு அதன் பின்னர் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது.இதனிடையே பெயர்த்து எடுக்கப்பட்ட சாலையில் உள்ள கருங்கற்களை கான்கிரீட் தடுப்பு கட்டை பணிக்கு பயன்படுத்துவதாகவும், நடைபெறும் பணியின் மதிப்பீடு மற்றும் என்னென்ன பணிகள் நடைபெறுகிறது என்பது பற்றிய விவர அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை எனவும், அது குறித்து அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் கேட்ட போது அவர்களுக்கு விவரங்கள் தரப்படவில்லை எனவும் குற்றம் சாட்டி, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி தலைமையில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட அதிமுகவினர்கள் இன்று திடீரென பேருந்து நிலைய மேம்பாட்டு பணி நடைபெறும் இடத்திற்கு வருகை புரிந்தனர். அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த பணியை தடுத்து நிறுத்தி ஊழியர்கள், மேற்பார்வையாளரிடம் பணியை தரமாக மேற்கொள்ள வேண்டும் எனவும்,பணியின் விவரங்களை நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு தெரிவிக்கும்படி அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டனர். இதனால் தற்காலிகமாக பேருந்து நிலைய மேம்படுத்தும்பணி நிறுத்தப்பட்டது இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story