திருப்பத்தூரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

எம்ஜிஆர் போட்ட பிச்சையில் ஆட்சிக்கு வந்தவர்கள் திமுகவினர் திருப்பத்தூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி விமர்சனம் செய்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஸ்டேட் வங்கி எதிரில் பட்டிலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்திய பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர்,மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

பின்னர் கண்டன உரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி எதிர்கட்சியாக திமுக இருந்த போது பேச்சியா பேசுனு. வடிவேல் சொல்வதை போல் அப்போது நல்ல வாய் ,ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நான் வாய் போல தேர்தலின் போது கொடுத்த 520வாக்குறுதிகளை ஒன்றை கூட ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் திட்டங்களை எடப்பாடியார் சொல்கிறார், ஸ்டாலின் செய்கிறார்.ரஜனிகாந்தின் அருணாசலம் படம் போல ஆண்டவன் சொல்றான், அருணாசலம் செய்கிறான் போல என பேசினார். எம்ஜிஆர் போட்ட பிச்சையில் ஆட்சிக்கு வந்தவர்கள் நிங்கள் கருணாநிதி என்ன தான ஆட்சிக்கு வந்தாரா எப்படி வந்தீர்கள்? யார் மூலமாக ஆட்சியைப் பிடித்தீர்கள்.

வரலாறு சொல்லுது கருணாநிதி புரட்சியாளர் எம்ஜிஆர் கிட்ட கெஞ்சனாறு எப்படியாவது என்னை ஒரு முறை முதலமைச்சர் ஆக்குங்கள் என கெஞ்சியதின் பெயரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கருணாநிதியை முதல்வர் ஆகியுள்ளார்.

திமுக என்ற கட்சி நிலைத்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பாடல் பாடி திமுகவை வளர்த்தார். நீங்களா வளர்த்தீங்க இல்ல உன் தலைவன் கருணாநிதியாவளத்தாரா அண்ணாவை ஆட்சியில் அமரவைத்து அழகு பார்த்ததும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்தான் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.

உடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர பேரூராட்சி பொறுப்பாளர்கள் என 500க்கும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story