கள்ளக்குறிச்சி அருகே அதிமுக பொதுக்கூட்டம்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் 107-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம். அதிமுக கட்சியின் நிறுவன தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் அவர்களின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் கரூரை அடுத்த வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் நேற்று இரவு நடைபெற்றது.
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சார்பாக நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான வளர்மதி, முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
அப்போது, அதிமுக கட்சியை உருவாக்க எம்ஜிஆர் அந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சிகளையும், அதற்கு எழுந்த எதிர்ப்புகளை எதிர்கொண்டது குறித்தும், கட்சியை திறம்பட நடத்தியும், தமிழக மக்களுக்கு ஒப்பற்ற ஆட்சி வழங்கியது குறித்தும் விரிவாக பேசினர்.
மேலும்,வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில், மீண்டும் அதிமுக எழுச்சி பெற்று, ஆட்சி அதிகாரம் பெற்று, மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய மீண்டும் அதிமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளும், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.