அலுவலக திறப்புக்கு அதிமுக செயலாளர் அழைப்பு

அலுவலக திறப்புக்கு அதிமுக செயலாளர் அழைப்பு

இசக்கி சுப்பையா

நாங்குநேரி அருகே மூலக்கரைப்பட்டி பேரூராட்சியில் நடைபெறும் அதிமுக அலுவலக திறப்பு விழாவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ளவேண்டும் என புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இசக்கி சுப்பையா அழைப்பு விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூலக்கரைப்பட்டி பேரூராட்சி அதிமுக அலுவலக திறப்பு விழா இன்று 22/01/24 நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய,நகர,பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் திரளாக பங்கேற்க புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இசக்கி சுப்பையா அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story