மணப்பாறையில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு

மணப்பாறையில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு

கரூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எல். தங்கவேலுக்கு ஆதரவாக அதிமுகவினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.


கரூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எல். தங்கவேலுக்கு ஆதரவாக அதிமுகவினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றிய பகுதிகளில் கரூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எல். தங்கவேலுக்கு ஆதரவாக அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். இதில், மணப்பாறை அதிமுக ஒன்றியச்செயலாளா் என்.அன்பரசன், பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.கே.எம்.முகமது இஸ்மாயில் ஆகியோா் தலைமையில் கட்சியினா் கருப்பூா் ஊராட்சி காரைக்குளம், வடக்கிப்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். அப்போது, மீனவரணி மாவட்ட செயலாளா் பொன்னுசாமி, தகவல் தொழில்நுட்ப மாவட்ட இணைச்செயலாளா் பொ.காவியக்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story