தமிழகத்தில் அதிமுக அலை வீசுகிறது: முன்னாள் அமைச்சர்

தமிழகத்தில் அதிமுக அலை வீசுகிறது: முன்னாள் அமைச்சர்
முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்
தமிழகத்தில் அதிமுக அலை வீசுகிறது.சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., கூட்டணிக்கு சாதகமான அலை வீசுகிறது என சிவகாசியில் நடந்த தேர்தல் கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்... விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க.,கூட்டணி கட்சிகளின் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது,விருதுநகர் தொகுதி நமக்கு சாதகமாக உள்ளது,மாற்றுக் கட்சியினரே தே.மு.தி.க.,தான் வெற்றி பெறும் எனக் கூறுகின்றனர். நல்ல நேரத்தில்தான் வேட்பு மனு தாக்கல் செய்தோம்,

இப்பொழுது நல்ல நேரத்தில் குத்து விளக்கு ஏற்றி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்துள்ளோம் எனவே வெற்றி நிச்சயம்.நமது ஆட்சியில் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் அதேபோல் விஜயகாந்தின் நல்ல பணிகள் பண்புகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.பட்டாசு தொழில் பிரச்னைக்காக நாம் மூத்த வழக்கறிஞரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடினோம்.

தமிழகம் முழுவதும் நமது கூட்டணிக்கு சாதகமான அலை வீசுகிறது. தி.மு.க., விற்கு எதிர்ப்பு அலை வீசுகிறது. அதே சமயத்தில் நம்முடைய உழைப்பு மிக அவசியம். இவ்வாறு அவர் பேசினார். வேட்பாளர் விஜய பிரபாகரன்,கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story