அதிமுக தனித்தே 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெறும் : மாஃபா பாண்டியராஜன்

அதிமுக தனித்தே 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெறும் : மாஃபா பாண்டியராஜன்
X

வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்தே 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெறும் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம், அரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் எம்.தாதம்பட்டி, அரூர் நகர், எச்.அக்ராஹரம், மொரப்பூர், கம்பைநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது : அதிமுக கூட்டணியில் பாஜக இல்லாததால் சிறுபான்மை மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது அதிமுக கூட்டணிக்கு 15க்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தேர்தல் நேரத்தில் பெரிய கட்சிகளும் ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் 52 லட்சம் பேர் தேர்தல் முகவர்களாக பணியில் ஈடுபடவுள்ளனர். வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்காக அதிமுகவினர் சிறந்த களப்பணியாற்றி வருகின்றனர். இதனால் அதிமுக தலைமையிலான கூட்டணி புதுச்சேரி உள்பட தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். காங்கிரஸ், திமுக கூட்டணி இருந்த போதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. தற்போது, நீட் தேர்வில் விலக்கு கோரி திமுக சார்பில் மாணவர்களிடம் கையொப்பம் பெறப்படுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில், நீட் தேர்வில் விலக்கு கிடைக்கும் என திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது என்றார்.இந்த சந்திப்பின் போது எம்எல்ஏ.க்கள் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), வே.சம்பத்குமார் (அரூர்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story