சங்ககிரியில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் வழிபாடு

சங்ககிரியில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் வழிபாடு

வழிபாடு செய்த அதிமுகவினர்

எம்ஜிஆர் பிறந்த நாள் கணபதிக்கு சிறப்பு பூஜை சங்ககிரி அதிமுக நிர்வாகிகள் வழிபாடு செய்தனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி திருச்செங்கோடு பிரிவு சாலை பகுதியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் அமரர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன்,அதிமுக மாநில பொதுக் குழு உறுப்பினர் வெங்கடேஷ,ஆகியோர் தலைமையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ராஜ விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அப்போது சங்ககிரி நகர செயலாளர் செல்வம்,முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் கருப்புசாமி, எம்ஜிஆர் மன்ற செயலாளர் மருதாச்சலம், உட்பட ஒன்றிய, நகர, மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story