முருகா பாலிடெக்னிக் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்

முருகா பாலிடெக்னிக் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்

எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்

கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி தாளாளர் ரஹமத்துல்லா தலைமை தாங்கினார். கல்லுாரி தலைவர் ஜெகநாதன், செயலாளர் அல்லாபஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் கண்ணன் அறிமுக உரையாற்றினார். துணை முதல்வர் பாஸ்கர் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பாளர் மருத்துவர் சீனுவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து பேசினார்.

Tags

Next Story