எய்ட்ஸ் விழிப்புணர்வு நம்பிக்கை மைய பணியாளர்கள் போராட்டம்

எய்ட்ஸ் விழிப்புணர்வு நம்பிக்கை மைய பணியாளர்கள் போராட்டம்

தபால் அனுப்பும் போராட்டம்

சேலத்தில், எய்ட்ஸ் விழிப்புணர்வு நம்பிக்கை மைய பணியாளர்கள் முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் பரவாமல் இருக்கவும் எய்ட்ஸ் நோயாளிகளை பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட கள ஆய்வு பணியாளர்களான நம்பிக்கை மைய பணியாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசாங்கம் தமிழகத்தில் 186 நம்பிக்கை மையங்களை மூட அரசாணை அனுப்பி உள்ளனர்.

இதனால், நம்பிக்கை மைய பணிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வையும் எய்ட்ஸ் நோய் பாதித்த நோயாளிகளையும் பாதுகாக்கும் பணியில் நம்பிக்கை மையப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பால் இவர்களின் பணி பாதிப்பு ஏற்படுவதோடு பொதுமக்களின் நலனும் பாதிக்கப்படும் எனவும் நம்பிக்கை மையத்தை தமிழகத்தில் மூடக்கூடாது.

தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இந்த மையத்தை மூடமலிருக்க தமிழக முதல்வர் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியர்கள் நல சங்கத்தினர் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் ஜெகஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த தகவல் அனுப்பும் போராட்டத்தில் மாநில பொருளாளர் ரமேஷ் உள்ளிட்டு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் நல சங்கத்தினர் பங்கேற்றனர்.

Tags

Next Story