விழுப்புரம் அரசு கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு

விழுப்புரம் அரசு கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் கல்லூரி செஞ்சுருள் சங்கம் இணைந்து, எஸ்.டி.ஐ/எச்.ஐ.வி/ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடத்தியது. இம்முகாமில் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையுரை ஆற்றினார். பேராசிரியர்கள் சேட்டு இயற்பியல் துறை மற்றும் கார்த்திகேயன் வரலாற்று துறைஅவர்களும் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள். மற்றும் சிறப்பு அழைப்பார்கள் ரா. பிரேமா DAPCU மாவட்டத் திட்ட மேலாளர், மருத்துவர் பிரியாபத்மாசினி வட்டார மருத்துவ அலுவலர், திருநங்கை ஷலீமா சமுதாய மேம்பாட்டு சங்கம், கடுங்கோ ஆலோசகர் மற்றும் அஞ்சலி NGO, ஆகியோர் மாணவர்கள் சமுதாயத்தில் விழிப்புணர்வோடு செயல்பட்டு எதிர்கொள்ளும் வழிமுறைகளை மாணவர்கள் மத்தியில் சிறந்த முறையில் எடுத்துரைத்தனர். அனைத்து துறை சார்ந்த மாணவர்களும் முகாமில் பங்கேற்றனர். மேலும் இந்த முகாமின் ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் கார்த்திகேயன் வணிகவியல் துறை வரவேற்புரையாற்றினார், இராஜவேல் தமிழ் துறை நன்றியுரையாற்றினார்.

Tags

Next Story