முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் - வநேத்ரா முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)யில், கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கமும், செஞ்சுருள் சங்கமும் இணைந்து நடத்திய 'உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு' நிகழ்ச்சியானது கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல், எச்.ஐ.வி பாசிடிவ் மக்கள் நல சங்கத்தின் தலைவர் கௌசல்யா, மற்றும் நாமகிரிப்பேட்டை, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினுடைய ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் சோதனை மையத்தின் ஆலோசகர், திருமதி. அன்புச்செல்வி, ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடையே எச்.ஐ.வி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குநர்-கல்வி முனைவர். இரா. செல்வகுமரன் அவர்கள் முன்னிலை வகிக்க, முதல்வர் முனைவர். எஸ்.பி.விஜய்குமார் மற்றும் சமூக செயல்பாட்டு புலமுதன்மையர். முனைவர்.எம். இராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ந.ராதாகிருஷ்ணன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

Tags

Next Story