டெர்மினல் 4ல் ஏர் இந்தியா விமானங்கள்
சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையத்தில், 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமான நிறுவனத்தின் உள்நாட்டு விமான சேவைகள் அனைத்தும், நேற்று முதல் டெர்மினல் நான்கிற்கு மாற்றப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில், தற்போது டெர்மினல் ஒன்றில் இருந்து இயக்கப்பட்டு வரும் 'விஸ்தாரா ஏர்லைன்ஸ்' விமான நிறுவனங்களின் வருகை, புறப்பாடு ஆகியவை, வரும் 27ம் தேதி முதல், டெர்மினல் நான்கில் இருந்து இயக்கப்பட உள்ளன. இதனால், பழைய உள்நாட்டு முனையமான டெர்மினல் ஒன்றில் இனிமேல், பயணியர் கூட்டம் வெகுவாக குறையும். ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், 168 பயணியருடன் சென்னைக்கு வந்தது. அதில் பயணம் செய்த, ஓமன் நாட்டைச் சேர்ந்த முகமத் சலீம், 35, என்ற பயணி, விமானத்திற்குள் புகை பிடித்தார். விமானம் தரையிறங்கியதும், பாதுகாப்பு அதிகாரிகள், ஓமன் பயணியை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
Next Story