செங்கத்தில் ஏ.ஐ.டி.யு.சி. அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே ஏ.ஐ.டி.யு.சி. அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் முத்தையன், தங்கராஜ், மாதேஸ்வரன், கம்யூனிஸ்டு கட்சி யின் தாலுகா செயலாளர் சர்தார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், பெட் ரோல், டீசல் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியமாக தொழிலாளர்களுக்கு ரூ.26ஆயிரம் வழங்கவேண்டும். வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.