ஏ.ஐ.டி.யூ.சி கட்டிடத் தொழிலாளர் சங்க முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
தபால் அனுப்பும் போராட்டம்
சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி கட்டிடத் தொழிலாளர் சங்க சார்பாக பொங்கல் போனஸ் ரூபாய் 5 ஆயிரம் வழங்க கோரி முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தலைமை தபால் நிலையம் முன்பு, ஏ.ஐ.டி.யூ.சி கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக, மாவட்ட செயலாளர் ராமன் தலைமையில், பொங்கல் போனஸ் வழங்க கோரி, முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருக்க கூடிய ஏ.ஐ.டி.யூ.சி கட்டடத் தொழிலாளர்களுக்கு, பொங்கல் போனஸ், புதுச்சேரி மாநிலத்தில் கட்டடத் தொழிலாளர்களுக்கு வழங்குவது போல, தமிழ்நாட்டிலும் பொங்கல் போனஸ் ரூ. 5 ஆயிரம் வழங்க கோரி, தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
Next Story