ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாசரேத்தில் கட்டுமானத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சார்பாக பேரூராட்சி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் கட்டுமானத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சார்பாக பேரூராட்சி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான சங்கத் தலைவர் டேவிட் தலைமை வகித்தார். சின்னத்துரை,மேரி தங்கமணி, ரீட்டா, முத்தம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மாணிக்கம், எழுத்தாளர் ஆறுமுகப் பெருமாள், மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ராமையா, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் முருகன், பஞ்சாலை ஏஐடியுசி செயலாளர் மரிய ஜோசப் ஹென்றி, மாவட்ட ஏஐடியுசி பொதுச் செயலாளர் லோகநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பாலன், ஜெயபாண்டியன், ராஜன், இஸ்ரவேல், செல்லத்துரை, சௌந்தர பாண்டியன், மந்திரமூர்த்தி மற்றும் ஆறுமுகனேரி, அம்பலசேரி, உடையார்குளம், சின்னமதிக்கூடல், ஏரல், திருச்செந்தூர் உட்பட பல பகுதிகளிலிருந்து நூற்றுக் கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story