விழுப்புரத்தில் ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் முன்பு ஏஐடியுசி தொழிலாளர் சங்கம் சார்பில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் முன்பு வியாழக்கிழமை மாலை தமிழ்நாடு ஏஐடியுசி தொழிலாளர் சங்கம் சார்பில் கட்டுமான தொழிலாளர்களின் அகில இந்திய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயமலர் தலைமை தாங்கினார், நிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் கீர்த்தி, மாவட்ட துணை செயலாளர் அரசு, மாவட்ட துணை தலைவர் வசந்தராஜ், தொழிலாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் சௌரிராஜன் கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர் மத்திய சட்டங்களை கலைக்க கூடாது, அதனை முறையாக செயல்படுத்த வேண்டும்,கட்டுமான தொழிலாளரின் சமூக பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும், நல வரி ஐந்து சதவீத வசூல் செய்ய வேண்டும், ஐ.நா சபை உலகத் தொழிலாளர் அமைப்பு வழிகாட்டுதல்படி கட்டுமான தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும், நலவாரியம் மூலமாக மருத்துவ இஎஸ்ஐ வசதி,காப்பீடு, பி.எப் பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் திவ்யா பிராங்கிளின், மாவட்டத் துணைத் தலைவர் ஆரோக்கியதாஸ், மாவட்ட தலைவர் சங்கர், மாவட்ட நிர்வாகக் குழு முத்துசாமி,ராஜாராம், குணசேகரன் உட்பட ஏராளமான கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story