ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்தல்

ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்தல்

மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள்


வேலூரில் 13 ஆம் ஆண்டு ஐயப்பன் ஆலயத்தில் கொடியேற்றி நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். வேலூர் மாவட்டம் வேலூர் கஸ்பா பகுதியில் 13 ஆண்டுகளாக ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் கார்த்திகை மாதம் முதல் நாளில் மண்டல பூஜை துவங்குவதை முன்னிட்டு ஸ்ரீ ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்யப்பட்டு கொடி மரத்தில் கொடியேற்றி கருப்புசாமிக்கு சிறப்பு பூஜை கணபதி பூஜை செய்து அதே பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிந்து கொண்டு இன்று முதல் 48 நாள் விரதத்தை கடைப்பிடிக்க தொடங்கினர்.

இதனை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனின் அருள் பெற்றுச் சென்றனர் சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் நடைபெறும் அனைத்து பூஜைகளும் வேலூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு படி பூஜை மண்டல பூஜை ஜோதி உள்ளிட்டவை அனைத்தும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story