நலத்திட்ட உதவி வழங்கிய அஜித் ரசிகர்கள்

நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நாமக்கல் மாவட்ட தன்னம்பிக்கை நாயகன் அஜித் அசோசியன் சார்பில் மே1 நடிகர் அஜித்குமார் அவர்கள் பிறந்த நாளை ஒட்டி, பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் செயல்படும் ஆனந்த மலர் அன்புக்கரங்கள் ஆதரவற்றோர் இல்லம் மற்றும் அலமேடு பகுதியில் செயல்பட்டு வரும் முதியவர்களை பராமரிக்கும் ஆதரவற்றோர் இல்லம் ஆகிய இரண்டு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அமைப்பினுடைய மாவட்ட தலைவர் சதீஷ்குமார், செயலாளர் தனசேகர், பொருளாளர் கார்த்தி, இளைஞரணி நிர்வாகி அருண் முன்னிலையில் அரிசி மூட்டை சிப்பம் வழங்கல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .மன்ற நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்வின் போது உடன் இருந்த னர்..

Tags

Next Story