அஜித்தின் 'விடாமுயற்சி' வெற்றி பெற... குச்சனூர் கோவிலில் வழிபாடு

அஜித்தின் விடாமுயற்சி வெற்றி பெற... குச்சனூர் கோவிலில் வழிபாடு
X

 அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் வெற்றி பெற... குச்சனூர் சனிபகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. 

அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் வெற்றி பெற... குச்சனூர் சனிபகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து அஜித் ரசிகர்கள் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குச்சனூர் ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோவிலுக்கு சென்று அஜித் பெயர், ராசிக்கு சிறப்பு அர்ச்சனை பூஜைகள் செய்தும், மேலும் அஜித் நடித்து வருகின்ற விடா முயற்சி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய வேண்டும் என ராசிபுரத்தில் இருந்து பத்துக்கும் மேற்பட்டோர் காரில் பயணம் செய்து குச்சனூர் ஸ்ரீ சனீஸ்வர பகவானை வேண்டிக் கொண்டனர்.

இராசிபுரம் நகர இளைஞரணி தலைமை அஜித்குமார் நற்பணி இயக்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட தலைமை நிர்வாகி ராமகிருஷ்ணன், அவர்களது தலைமையில் அரசியல் வேண்டாம் அஜித்தே போதும் இயக்கத்தின் செயலாளர் சுரேஷ், துணைச் செயலாளர் வினோத், தொடர்பாளர் சதீஷ், மற்றும் பாஸ்கர், பூபதி, ரமேஷ், உள்ளிட்ட நிர்வாகிகள் ரசிகர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். மேலும் தொடர்ந்து செயலாளர் சுரேஷ் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.

Tags

Next Story