கொன்னையூரில் அக்கினி காவடி!

கொன்னையூரில் அக்கினி காவடி!

அக்கினி காவடி

பொன்னமராவதி அருகே கொன்னையூரில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூரில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் பூச்சொரிதல் விழா நடந்தது. கொன்னையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூத்தட்டுகள், பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு சமர்ப்பித்து வழிபாடு நடத்தினர். நேற்று அக்கினிகாவடி விழா நடந்தது. கோயில் முன்பு வளர்க்கப்பட்ட 14 அக்கினி குண்டங்களில் ஆலவயல், தேரடி மலம்பட்டி, கண்டியாநத்தம், துாத்துார்,மூலங்குடி, கொத்தமங்கலம், தச்சம்பட்டி, கொன்னைப்பட்டி, ரெட்டியபட்டி, சுந்தரசோழபுரம், குழிபிறை, குழிபிறைப் பட்டி, நல்லுார் வீரணாம்பட்டி, பனை யப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடியுடன் அக்கினி குண்டத்தில்இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வழி பட்டனர். விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா, கோயில் ஆய்வாளர் லாவண்யா, செயல் அலுவலர் ஜெயா மற்றும் பூஜ கர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் புதுக் கோட்டை, திருமயம், திருப்பத்துார், பொன்னமராவதி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக் கப்பட்டன. கொப்பனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப் பட்டிருந்தது. பொன்னமராவதி டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மா உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story