கொன்னையூரில் அக்கணிக்காவடி விழா

பொன்னமராவதி அருகே பிரசித்தி பெற்ற கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் அக்கணிக்காவடி விழா நடந்தது.

பொன்னமராவதி அருகே பிரசித்தி பெற்ற கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் பெருந்திருவிழா மற்றும் நாடு செலுத்துதல் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு காண திருவிழாவை முன்னிட்டு பூச்செரிதல் கடந்த மாதம் 17ஆம் தேதி நடந்தது. கொன்னையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பூத்தட்டுகளை எடுத்து வந்த அம்மனுக்கு சமர்ப்பித்தனர்.

18ஆம் தேதி அக்கணிக்காவடி விழா நடந்தது. தொடர்ந்து பங்குனி பொங்கல் பெருந்திருவிழா 24ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது விழா நாட்களில் தினமும் மண்டக்கா படித்தார்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு இரவு வீதி உலா நடந்து வந்தது. நேற்று பொங்கல் விழா நடந்தது. கோயில் முன்பு ஏராளமான பக்தர்கள் பொங்கல் இட்டு வழிபாடு செய்தனர்.

மதியம் பொன்னமராவதி நாடு மிராஸ் ராஜா அம்பலகார் தலைமையிலும், ஆலவயல் நாடு மிராசு அழகப்பன் அம்பலம் தலைமையிலும், செம்பூதி நாடு ராஜேந்திரன் தலைமையிலும் மற்றும் செவலூர் நாட்டினர் கம்பு ஈட்டிகளுடன் வந்து நாடு செலுத்துதல் திருவிழா நடந்தது. ஆலவயல் நாட்டை சேர்ந்த பக்தர்கள் உடலில் சேற்றை பூசி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் புதுகை மாவட்டம் மட்டுமின்றி சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story