அழகுபாா்வதி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

அழகுபாா்வதி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

அழகுபாா்வதி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம் 

தென்காசி மாவட்டம், சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் 10 நாள்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் இத்திருவிழா நிகழாண்டு செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், மாலை 9 மணிக்கு கோயில் கலையரங்கில் கலை நிகழ்ச்சியும், இரவு 3 மணிக்கு சப்பர வீதி உலாவும் நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 9ஆம் திருநாளான மே 8ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் 7 சமுதாய மண்டகப்படிதாரா்கள் செய்துவருகின்றனா்.

Tags

Next Story