அக்ராபாளையம் ஏரிக்கரை சாலை சீரமைப்பு பணி துவக்கம்

அக்ராபாளையம் ஏரிக்கரை சாலை சீரமைப்பு பணி துவக்கம்

சாலை சீரமைப்பு பணி

மழையால் சேதமடைந்த அக்ராபாளையம் ஏரிக்கரை சாலையை தார் சாலையாக மாற்றுவதற்காக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், அக்ராபாளையம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக ஏரிக்கரை சாலை சேதமடைந்து பொதுமக்கள் வாகனங்களில் செல்வதற்கு சிரமப்பட்டனர். இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில் தார் சாலை அமைக்க மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டடுள்ளன. தற்போது உள்ள சாலை சமன்படுத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story