தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித்தொகை திட்டத் (NMMS) தேர்வில் அல் அமீன் பள்ளி மாணவர் சாதனை

X
NMMS தேர்வில் வெற்றி
NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சிவகார்த்திக்கை தலைமையாசிரியர் ஷேக் நபி மற்றும் உதவித் தலைமையாசிரியர்கள் பாராட்டு.
தமிழ்நாடு முழுவதும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித்தொகை திட்டத் (NMMS) தேர்வு நடைபெற்றது. அத்தேர்வில் கலந்து கொண்ட மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சிவகார்த்திக் 118 மதிப்பெண் பெற்று தமிழக அளவில் 243ம் இடம் பிடித்து பள்ளிக்கும், மதுரை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். அம்மாணவருக்கு பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு தலைமை ஆசிரியர் ஷேக் நபி தலைமை தாங்கினார். சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தை சேர்ந்த நீலமேகம் நிமலன், தினேஷ்குமார், ஆர்த்திகா நிமலன், பெருமாள் நீலமேகம், தமிழ்ஆர்வலர் ஆதித்தா மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள் ரஹமத்துல்லா, ஜாகிர் உசேன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர் மற்றும் பயிற்சியளித்த ஆசிரியர்கள் ஷாஜகான், மிர் நாமத்துல்லா இப்ராகிம், மற்றும் அப்துல் சலாம் ஆகியோர்களை பாராட்டினர்.
Next Story
