ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் பிறந்தநாள் - திமுகவினர் வாழ்த்து.

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திமுகவினர்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவருமான, பெரியார் விருது பெற்ற கிருஷ்ணமூர்த்தியின் 79வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளானோர், கொளக்காநத்தம் ஊராட்சியில் உள்ள அவரது வீட்டில், நேரில் சென்று அவருக்கு பொன்னாடை மற்றும் மலர் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் வல்லவன் செல்லமுத்து மற்றும் நாரணமங்கலம் தனசேகர், பெரம்பலூர் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண், மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கலைமணி, ராஜகோபால், நக்கசேலம் சிவகுமார், கிளைச் செயலாளர் ராமராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் சேகர், மகளிர் அணி துணை அமைப்பாளர் புஷ்பராணி, கோபால், பிரபாகரன் திமுக பிரதிநிதி, ஜீவா , இருர் கிளை செயலாளர் பன்னீர்செல்வம், பாடலூர் இளையராஜா,மணி முருகன், முத்து, ராஜா, பாஸ்கர், ரகு மற்றும் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் திமுக மூத்த நிர்வாகி ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணமூர்த்திக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
