அழகிரிநாதர் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேரோட்டம்

அழகிரிநாதர் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேரோட்டம்

சேலம் கோட்டை அழகிரிநாதர் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.


சேலம் கோட்டை அழகிரிநாதர் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.

சேலம் கோட்டை பகுதியில் உள்ள அழகிரிநாதர் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி கடந்த 16ஆம் தேதி வைகாசி விசாக தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. மேலும் தொடர்ந்து தினமும் பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சுவாமி திருவீதி உலா நடத்தப்பட்டு. இந்நிலையில் வைகாசி விசாக தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. முன்னதாக காலை பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

இதனை அடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமிகள் வைக்கப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சேலம் ராஜகணபதி கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் இரண்டவது அக்ரஹாரம், சின்ன கடைவீதி, முதல் அக்கிரகாரம் வழியாக மீண்டும் நிலை வந்து சேர்ந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story