ஆலஞ்சி  புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய விழா

ஆலஞ்சி  புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய விழா
X
 கொடியேற்றம்
கருங்கல் அருகே ஆலஞ்சி  புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்கு குடும்ப விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கருங்கல் அருகேயுள்ள ஆலஞ்சி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்கு குடும்ப விழா நடைபெறும். அதன்படி 184 ஆவது ஆண்டு பங்கு குடும்ப விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா கொடியேற்றம் நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு நடந்தது. மேலராமன் புதூர் பங்கு பணியாளர் மரிய சூசை வின்சென்ட் தலைமையில் ஜெபமாலை புகழ் மாலை தொடர்ந்து திருவிழாவிற்கான கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆலஞ்சி மறைவட்ட முதன்மை பணியாளர் தேவதாஸ், பங்கு பணியாளர் ஜோசப், அமலனை அருட் சகோதரிகள், அருட்பணி பேரவையினர், பங்குமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த திருவிழா 11 ஆம் தேதி மாலை கொடி இறக்கத்துடன் நிறைவடைகிறது.

Tags

Next Story