ஆலங்குளம் : தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி

ஆலங்குளம் : தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி

முருகதா்ஷினி

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கரும்பனூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவர்கள் மாரிசெல்வம் - திம்மக்கால் தம்பதியினர். இவா்களுக்கு 2 வயதில் முருகதா்ஷினி என்ற மகள், 8 வயது, 6 மாத வயதில் 2 மகன்கள் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், புதன்கிழமை 3 குழந்தைகளையும் தனது தாயாரிடம் ஒப்படைத்து விட்டு திம்மக்கால் கடைக்குச் சென்றுள்ளார். பின்னா், அவா் வீட்டுக்கு வந்தபோது, முருக தா்ஷினியை மட்டும் காணவில்லை. அவரைத் தேடியபோது, வீட்டின் முற்றத்தில் பதிக்கப்பட்டிருந்த 50 லிட்டா் கொள்ளளவுள்ள நெகிழி தொட்டியின் தண்ணீரில் மூழ்கியபடி கிடந்துள்ளார். அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், ஏற்கெனவே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story