குடிபழக்கத்திற்கு ஆளானவர் தற்கொலை

குடிபழக்கத்திற்கு ஆளானவர் தற்கொலை
குடிப்பழக்கத்திற்கு ஆளான நபர் விஷ மருந்து அருந்தி தற்கொலை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை
விருதுநகரில் குடிபழக்கத்திற்கு ஆளான நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகரை சேர்ந்தவர் கற்பகம். இவருடைய கணவர் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து திரும்பிய நிலையில் தொடர்ந்து குடித்து வந்ததாகவும் இதனால் குடும்பத்தில் சண்டை போட்டு வந்த நிலையில் கலந்த 28ஆம் தேதி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்த ராதாகிருஷ்ணனை அவர் மனைவியுடன் சண்டை இட்ட நிலையில் கோபித்துக் கொண்டு தோட்டத்திற்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றதாகவும், சிறிது நேரம் கழித்து தோட்டத்திற்கு சென்று கற்பகம் பார்த்த பொழுது ராதாகிருஷ்ணன் வாயில் நுரை தள்ளிய அளவில் மயங்கி கிடந்ததாகவும் அவரை அருகில் இருப்பவர்கள் உதவி உடன் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்ததாக கூறப்படுகிறது.

ராதாகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி 29ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து கற்பகம் அளித்த புகாரியின் அடிப்படையில் சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story