மாலை அணிந்தும் கைவிட முடியாத மதுப்பழக்கம் - தொழிலாளி தற்கொலை

X
தற்கொலை
சபரிமலைக்கு மாலை அணிந்தும் மது பழக்கத்தை கைவிட முடியாததால் விரக்தியடைந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி புதிய பஸ் நிலையம் அருகில் ஆஞ்சநேயாநகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (36), கூலித்தொழிலாளி. மது பழக்கம் இருந்த இவர், சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்துள்ளார். ஆனாலும் மது அருந்தாமல் சக்திவேலால் இருக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே மதுவை மறக்க முடியாமல் இருந்த சக்திவேல், வீட்டில் சபரிமலைக்கு அணிந்து இருந்த மாலையை கழற்றி வைத்து விட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவருடைய மனைவி ரோஜா சங்ககிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story
