மது போதையில் பிரச்சனை : எஸ்.எஸ்.ஐ பணியிடை நீக்கம் - எஸ்பி உத்தரவு!

மது போதையில் பிரச்சனை :  எஸ்.எஸ்.ஐ பணியிடை நீக்கம் - எஸ்பி உத்தரவு!

எஸ்.எஸ்.ஐ வெங்கடேசன், எஸ்பி மணிவண்ணன்

தேர்தல் பணியின் போது மது போதையில் பிரச்சனையில் ஈடுபட்ட சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 19-ந் தேதி நடைபெற்றது. இதையொட்டி தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மண்டல பொறுப்பாளர்கள் மேற்பார்வையில் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் மற்றும் வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்கள் வேனில் கொண்டு செல்லப்பட்டன.

இந்த வாகனத்துக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக காவல்துறை சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் அல்லது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (மொபைல் டீம்) நியமிக்கப்பட்டனர். அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 10 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லும் வேனிற்கான பாதுகாப்பு பணிக்கு வேலூர் பாகாயம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் நியமிக்கப்பட்டார்.

வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளில் மண்டல பொறுப்பாளர்கள் வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்களை எடுத்து சென்றபோது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மதுபோதையில் இருந்ததாகவும், தேர்தல் பணியில் இருந்த அரசு அலுவலர்களின் பணிக்கு இடையூறு மற்றும் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்கு பிறகு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசனை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story