குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் தூக்கிட்டு தற்கொலை

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்  தூக்கிட்டு தற்கொலை
X
காவல் நிலையம் 
அல்லம்பட்டியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அயன் கரிசல்குளம் பகுதியைச் சார்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகன் ராஜசேகர் 37. இவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள நிலையில் ராஜசேகர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது .அவருடைய குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ராஜசேகரை விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் மனைவியுடன் வசிப்பதற்காக தந்தை அனுப்பி வைத்ததாகவும் அங்கு வசித்து வந்த ராஜசேகர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story