சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைப்பு

சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைப்பு

கருங்கல்பட்டி அண்ணாநகரில், சாய்ந்த இரண்டு மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டது.

கருங்கல்பட்டி அண்ணாநகரில், சாய்ந்த இரண்டு மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டது.

சாய்ந்த கம்பங்கள் சரிசெய்யப்பட்டது; கருங்கல்பட்டி அக்ரஹாரம், அண்ணாநகரில், பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், சாய்ந்த மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டது. மல்லசமுத்திரம் ஒன்றியம், கருங்கல்பட்டி அக்ரஹாரம் பஞ்., அண்ணாநகரில், குடியிருப்புகள் அருகில், கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னர், மின்கம்பம் அமைக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் இருந்தது. அருகில் குடியிருப்புகள் இருப்பதால், எந்நேரம் வேண்டுமானாலும் குடியிருப்புகள் மீதுவிழுந்து பெரும்சேதம் ஏற்படும் விதமாக இருந்தது. இதனால், இங்குள்ள மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வந்தனர். இதுகுறித்து மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததின் பேரில், வையப்பமலை மின்வாரிய அதிகாரிகள் ஆய்வுசெய்து, போர்க்கால அடிப்படையில் பழைய கம்பங்களை மாற்றி, புதிய மின்கம்பங்களை அமைத்தனர். இதனால், மக்கள் மகிழ்சியடைந்தனர். அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்தனர்.


Tags

Next Story