கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் 26 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


விழுப்புரத்தில் 26 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரத்தில் 26 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகரக் கூட்டுறவுக் கடன்சங்கப் பணியாளர்களுக்கு 2021, டிசம்பர் 31ஆம் தேதியுடன் ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், கூட்டுறவுச் சங்கப் பதிவாளரின் உத்தரவின்படி 2022, ஜூன் 15}ஆம் அமைக்கப்பட்ட ஊதியக்குழு அறிக்கையை விரைந்து பெற்று, புதிய ஊதியத்தை வழங்க வேண்டும்.

தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கப் பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் 2023, மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்துவிட்டது. எனவே கூட்டுறவுச் சங்கப் பதிவாளரின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட ஊதியக்குழு அறிக்கையை பெற்று, 2023,ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கணக்கீட்டு புதிய ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிப்பணிகளை மேற்கொள்ளும் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களை கனரக வாகனங்களை வாங்கி, சங்கத்தில் பயன்படுத்த வேண்டும் என்று கூறுவது ஏற்புடையதல்ல.

விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் கூட்டுறவுக் கடன்சங்கங்களுக்கு லாரி, சுமை வேன், டிராக்டர் போன்ற வாகனங்களை வாங்க வேண்டும் என வலியுறுத்துவதை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். மாவட்ட அளவில் மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் கூட்டுறவுப் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பயிர்க்கடன் வழங்குவதற்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான விதிகள் ஏற்படுத்தியதை போன்று, சங்கங்கள் மூலம் வழங்கப்படும் அனைத்துவகையான கடன்களுக்கும் ஒரேமாதிரியான விதிகள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் போன்றவற்றை அமல்படுத்த வேண்டும். கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பணிமூப்புப் பட்டியலை வெளியிட்டு, பதவி உயர்வுகளை வழங்க வேண்டும். தொடக்க வேளாண், நகர வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கேரள மாநிலக் கூட்டுறவு சங்கங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித்திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மாநிலத்தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர்என். ஏழுமலை தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் டி.எம்.பி. அனந்தசயனன் முன்னிலை வகித்தார்.

மாவட்டப் போராட்டக்குழுத் தலைவர் டி.மூர்த்தி, ஓய்வு பெற்ற பணியாளர் சங்க கடலூர் மாவட்டச் செயலர் பாண்டியன் சிறப்புரையாற்றினர். சங்கத்தின் பொருளாளர் பழனி, துணைத் தலைவர்கள் சுகுமார், ஏழுமலை, இணைச் செயலர்கள் பன்னீர்செல்வம், பரிமளாதேவி, நிர்வாகிகள் சம்பத், முத்து, புருஷோத்தமன், கலியபெருமாள், அண்ணாதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story