திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து குடும்பங்களும் பலனடைந்துள்ளன

திராவிட மாடல் ஆட்சியில், அனைத்து குடும்பங்களும் அரசு திட்டங்களால் பலன் அடைந்துள்ளன என, தஞ்சாவூர் திமுக வேட்பாளர் முரசொலி தெரிவித்தார்.

திராவிட மாடல் ஆட்சியில், அனைத்து குடும்பங்களும் அரசின் ஏதாவது ஒரு திட்டங்களால் நிச்சயமாக பலன் அடைந்துள்ளனர் என, தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ச.முரசொலி தெரிவித்தார்.

திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டி, ராயமுண்டான்பட்டி, மனையேரிப்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர் ச.முரசொலி பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதோ ஒரு வகையில் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைந்திருப்பது காண முடிகிறது. மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்களுக்கு ஆய்வு செய்து வழங்கப்படும். கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை கட்டணமில்லா பேருந்து வசதி என தமிழகத்தில் பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு செய்து வருகிறது.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும். கூலியும் உயர்த்தி வழங்கப்படும். செல்லும் இடங்களில் எல்லாம் தமிழக அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்த பொதுமக்களின் வரவேற்பு உற்சாகத்தை தருகிறது. எனவே, நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" இவ்வாறு பேசினார்.

இக்கூட்டத்தில், திருவையாறு எம்.எல்.ஏ., துரை.சந்திரசேகரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story