அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டம்

பெரம்பலூரில் நடந்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டத்தில் தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் மீது பாரபட்சம் இல்லாமல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் 3 -ரோடு பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில்ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்றது, இதில் மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் மாநில பொருளாளர் பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர்கள் கலையரசி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் 2024 நடப்பாண்டு தொடங்கி ஒரு மாதம் காலம் முடிவடைந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் வேலை வழங்கவில்லை வேலை இன்மை மற்றும் வறட்சியால் வேலை இழந்து வருமானம் இழந்த விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு முழுமையாக, தொடர்ச்சியாக வேலை வழங்கிட வேண்டும், தற்போது உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள தினக்கூலி, ரூபாய் 319 குறைக்காமல் வழங்கிட வேண்டும், வெயிலின் உச்சம் அதிகளவு உள்ளதால் வெப்ப அலை வீசிவரும், இந்த காலத்தில் வெயில் தாக்குதலில் இருந்து ஊரக வேலை பணி யாட்களை பாதுகாக்கும் வகையில் காலை, மாலை என வேலைகளை பிரித்து செயல்படுத்த வேண்டும்,

காலபருவம் மற்றும் இடக்கால மழை அளவு 83 சதவீதமாக குறைந்துள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் வரட்சி நிலவுகிறது, கிராமப்புறத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் நீக்க வேண்டும், பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசு ஏற்படுத்தப்பட்ட குளறுபடிகளை கலைந்து வீடு கட்டும் பணிகளை நிதி ஒதுக்கீடு செய்து, விரைவில் வீடுகளை கட்டி தர வேண்டும், பதவி அதிகாரத்திற்காக நாட்டு நலனை காவு கொடுக்கும் பாஜக அரசு பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் தினந்தோறும் சட்ட விதிமீரலில் ஈடுபட்டு வருவதை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட குழு வன்மையாக கண்டிக்கிறது, தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் மீது பாரபட்சம் இல்லாமல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய தலைவர் செல்லதுரை, பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள், சரோஜினி, வெள்ளையப்பன் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் வீரசிங்கம், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story