அகில இந்திய கூடைப்பந்தாட்டப் போட்டி

அகில இந்திய கூடைப்பந்தாட்டப் போட்டியில் கேரளா மின்வாரிய கூடைப்பந்து அணி மற்றும் சென்னை இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றன.
தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அமரர் பி.டி. சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 63 ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்தாட்டப் போட்டியில் கேரளா மின்வாரிய கூடைப்பந்து அணி மற்றும் சென்னை இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றனர் தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளிக் ஸ்போர்ட்ஸ் கிளப் பிடி.சிதம்பர சூர்ய நாராயணன் நினைவு சுழற் கோப்பைகாண 63வது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி பெரியகுளம் தென்கரையில் உள்ள நினைவடங்கத்தில் மே 15 ஆம் தேதி தொடங்கி வருகின்ற 21ம் தேதி வரை தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மூன்றாம் நாளாக நான்கு போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் பிற்பகல் பெரியகுளம் பகுதியில் தொடர் மழை காரணமாக நடைபெற இருந்த போட்டிகளை சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் ரத்து செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று ரத்து செய்யப்பட்ட போட்டிகள் இன்று காலை நடைபெற்றனர். இதில் முதல் போட்டியில் கேரளா மின்வாரிய அணியும், சென்னை ஐ சி எப் கூடைப்பந்து கழக அணியும் மோதியதில் 71 க்கு 62 என்ற புள்ளி அடிப்படையில் கேரளா மின்வாரிய கூடைப்பந்து அணி வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியும், எஸ் பி ஓ ஏ பழைய மாணவர்கள் கூடைப்பந்து கழக அணியும், மோதியதில் 72க்கு 57 என்ற புள்ளி அடிப்படையில் சென்னை இந்தியன் வங்கி கூடைப்பந்து அணி வெற்றி பெற்றது.

Tags

Next Story