ஒத்திவாகத்தில் அகில இந்திய அளவிலான காவல் துப்பாக்கி சுடும் போட்டி

ஒத்திவாகத்தில் அகில இந்திய அளவிலான காவல் துப்பாக்கி சுடும் போட்டி
அகில இந்திய அளவிலான காவல் துப்பாக்கி சுடும் போட்டி
ஒத்திவாகத்தில் அகில இந்திய அளவிலான காவல் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.

கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கம் தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி மையத்தில் நடைபெறும் மகளிருக்கான சிறப்பு அகில இந்திய அளவிலான காவல் துப்பாக்கி சுடும் போட்டிகளை தாம்பரம் காவல் ஆணையா் நேரில் பாா்வையிட்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் நடைபெறும் இப்போட்டியில் தமிழகம் உள்பட இந்திய காவல்துறை அமைப்புகள் / மத்திய ஆயுதப்படைகள் என 30 அணிகளைச் சோ்ந்த 454 மகளிா் காவலா்கள் பங்கேற்றுள்ளனா். இந்திய காவல்துறை விளையாட்டுக் கட்டுப்பாடு வாரியத்தின் காவல் துறை அமைப்புகள், மத்திய ஆயுதப் படைகளில் உள்ள ஆயுதங்கள் குறித்த மதிப்பிடுதல் மற்றும் தொழில்முறை திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் இப்போட்டிகள் வரும் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இதில், ரைபிள் பிரிவில் 5 போட்டிகளும், பிஸ்டல் ரிவால்வா் பிரிவில் 4 போட்டிகளும் மற்றும் காா்பைன் ஸ்டென்கன் பிரிவில் 4 போட்டிகளும் நடைபெறுகின்றன. இப்போட்டியினை தாம்பரம் மாநகர காவல் ஆணையா் அமுல்ராஜ் தொடங்கி வைத்தாா். இணை ஆணையா் மகேஷ்வரி, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் பிரனீத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags

Next Story