அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டம் 
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஒரு தனியார் ஒட்டல் அரங்கில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு வேலூர் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட தலைவர் நரேஷ்சந்த்ஜெயின் தலைமை தாங்கினார். கமல் சந்த் ஜெயின், பன்னீர்செல்வம், அனீப், மாலிக், கமலக்கண்ணன் சுபம்ராதா ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் சத்ய சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட்துறையின் தேசிய தலைவரும் நிறுவனருமான டாக்டர் ஆ.ஹென்றி சிறப்புரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக டிடிசிபி உதவி இயக்குநர் பவித்ரா, தேசிய அமைப்பு செயலாளர் நேருநகர் நந்து, தேசிய துணை தலைவர் செந்தில்குமார், தேசிய ஒருங்கிணைப்பாளர் தமிழரசன், தேசிய துணை செயலாளர்கள் கிருஷ்ணகுமார், மொய்தீன், அப்துல்காதர், தேசிய செயற்குழு உறுப்பினர் பாபு (எ) வேடியப்பன், தலைமை நிலைய செயலாளர் கார்த்தி, மாநில பொருளாளர்கள் ஜெயசங்கர், ரவி மாநில இணை செயலாளர்கள் ராஜா பக்ருதின் அலி, அகமத், ருனானா, மாநில செயற்குழு உறுப்பினர் முனீஸ்வரன், புரவலர் உறுப்பினர் கிளமெண்ட்ரொசாரியோ மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சின்னதுரை கமலக்கண்ணன், பன்னீர், இமாலயா முத்து, ஹேமந்த் குமார், கவுஸ் சர்க்கார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத பட்டா வீட்டு மனைகளை வாங்கி வைத்துள்ள பொது மக்களின் நலன் கருதி முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதலை பெற்று பட்டா மனைகளை அங்கீகாரம் பெறும் வகையில் இறுதியாக ஒரு அரிதான வாய்ப்பினை வழங்கி மனை வரன் முறை சட்டத்தை மேலும் 6 மாத காலம் எதிர்வரும் 29.02.2024 வரை நீட்டிப்பு செய்து அரசாணை எண் 118/2023ஆக வெளியிட்டுநடை முறைப்படுத்தியமைக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசுக்கும் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறைக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் புதிய வீட்டு மனை பிரிவினை ஏற்படுத்துவதற்கு தற்போதுள்ள 7 மீட்டர் அணுகுசாலை என்ற அளவினை மாற்றியமைத்து ௬ மீட்டர் என குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 தீர்மானங்கள் ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் திருவண்ணாமலை மாவட்ட பொருளாளர் ஜெய்சங்கர் மாவட்ட இணை செயலாளர் கோபிநாத் மாவட்ட அமைப்பு செயலாளர் சாகுல்அமீது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உள்பட ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை மாவட்ட துணை தலைவர் குரு. கண்ணன் நன்றி கூறினார்.

Tags

Next Story