அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி : கோவை பெண் காவலருக்கு தங்கம்

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி :  கோவை பெண் காவலருக்கு தங்கம்

பதக்கம் வென்ற பெண் காவலர்  ரூபாவதி

அகில இந்திய அளவிலான பெண் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டியின் 300 மீட்டர் பிரிவில் கோவையை சேர்ந்த பெண் காவலர் தங்க பதக்கத்தை வென்றார்.

கோவை: தமிழ்நாடு காவல்த்துறையில் மகளிர் போலீசாரின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு அகில இந்திய அளவிலான பெண் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 15-ந் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் துவங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அதிரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் 16-ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் தமிழகம், கேரளா,கர்நாடகா, மத்திய பிரதேசம், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெண் போலீசார் மத்திய காவல் அமைப்பினர் என 30 அணிகளை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டனர்.

இதில் கோவை ரயில்வேயில் பணியாற்றும் பெண் போலீஸ் ரூபாவதி 300 மீட்டர் துப்பாக்கி சுடுதலுக்கான போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.கோவை திரும்பிய அவருக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் பணியாற்றும் போலீசார் பாராட்டினர்.

Tags

Next Story