பரமக்குடியில் அகில இந்திய பெண்கள் தின பேரணி

பரமக்குடியில் அகில இந்திய பெண்கள் தின பேரணி

பேரணி 

பரமக்குடியில் மக்கள் அமைப்பு சார்பில் அகில இந்திய பெண்கள் தின பேரணி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் மக்கள் அமைப்பு சார்பில் அகில இந்திய பெண்கள் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பெண்களுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பெண்கள் நகர் முழுவதும் பேரணியாக வந்தனர். அதனை தொடர்ந்து பரமக்குடியில் உள்ள தனியார் மஹாலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் தமிழக பெண்கள் கூட்டமைப்பின் முன்னாள் மாநில தலைவி ராமலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். பெண்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags

Next Story