நெல்லை - தூத்துக்குடி ரயில்கள் முழுவதும் ரத்து; மதுரை கோட்டம் தகவல்

நெல்லை - தூத்துக்குடி ரயில்கள் முழுவதும் ரத்து; மதுரை கோட்டம் தகவல்

கனமழை காரணமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், நெல்லை- தூத்துக்குடி ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்டம் ரயில்வே அறிவித்துள்ளது.  

கனமழை காரணமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், நெல்லை- தூத்துக்குடி ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்டம் ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் பாதை சீரமைப்பு பணிக்காக ரயில்கள் ரத்து மழை, வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில்வே பிரிவில் ரயில் பாதை சிரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவில் இயக்கப்படும் முன்பதிவில்லாத ரயில்கள் அனைத்தும் டிசம்பர் 20 அன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டன. மேலும் டிசம்பர் 20 அன்று திருநெல்வேலியில் இருந்து காலை 07.00 மணி மற்றும் மதியம் 01.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை முன்பதிவு இல்லாத ரயில்கள் மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 10 மணி மற்றும் மாலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய திருநெல்வேலி முன்பதிவு இல்லாத ரயில்கள் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டன. வாஞ்சி மணியாச்சி - திருச்செந்தூர், திருநெல்வேலி - நாகர்கோவில், தூத்துக்குடி - திருநெல்வேலி முன்பதிவில்லாத ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.

ஈரோடு - திருநெல்வேலி முன்பதிவில்லாத ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையே இயக்கப்படும் அனைத்து முன்பதிவில்லாத ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. டிசம்பர் 20 அன்று தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் விருதுநகரில் இருந்தும், தூத்துக்குடி - சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்தும் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி ரயில் நிலையத்தில் மழை நீர் முழுமையாக வெளியேறியதால் டிசம்பர் 19 அன்று சென்னையில் இருந்து புறப்பட்ட திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி வரை இயக்கப்பட்டது.

Tags

Next Story