காமராஜ்நகர் காலினியில் அனைத்துக் கட்சி சுவர் விளம்பரம் மறைப்பு
சுவர் விளம்பரங்கள் மறைப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமநாயக்கன்பாளையம் காமராஜ் நகர் காலனி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசித்து குடியிருப்பு வீடுகளுக்கான பட்டாவும் விவசாய நிலங்களுக்கான பட்டாவும்,
இதுவரை வழங்காமல் நான்கு தலைமுறைகளாக இருந்து வருவதாகவும் தெரிவித்தும் அனைத்து கட்சியினரும் தேர்தல் வரும் பொழுது மட்டும் வாக்கு சேகரிக்க வருபவர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான பட்டா பெற்று தருவதாக கூறி வாக்கு பெற்றுக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றவுடன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும்,
இது குறித்து வட்டாச்சியர்,வருவாய் கோட்டாச்சியர், மாவட்ட ஆட்சியர், அமைச்சர்,முதலமைச்சர் தனிப்பிரிவு பல முறை மனுக்கல் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால் தற்போது எங்கள் பகுதிக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அனைத்து கட்சியைச் சார்ந்த அப்பகுதி மக்கள் தெரிவித்து அங்கு தெருக்களிலும் சுவர்களிலும் வரையப்பட்ட அனைத்து கட்சியின் சின்னங்களை தற்போது அழிக்கும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டும், வேண்டும் வேண்டும் பட்டா வேண்டும் பட்டா வழங்கவில்லை என்றால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது