அனைத்து சமுதாய திருமணம்
அனைத்து சமுதாய திருமணம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு ஆல் இந்தியா கேரளா முஸ்லிம் கலாச்சார மையத்தின் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய பெண்களுக்கு, இலவச திருமணம் செய்து வைக்க திட்டமிட்டனர்.
75 பெண்களுக்கு திருமணம் செய்ய திட்டமிடபட்டு சென்னையை சேர்ந்த 17 ஜோடி,திருச்சியை சேர்ந்த 25 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.இந்த நிலையில் மூன்றாவது கட்டமாக கோவை குனியமுத்தூர் பகுதியில் ஏழை எளிய பெண்கள் 23 பேருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
கோவை, ஈரோடு,திருப்பூர்,நீலகிரி,புதுக்கோட்டை,சென்னை, செங்கல்பட்டு,தர்மபுரி உள்ளிட்ட ஏராளமான இருந்து வந்து திருமண விழாவில் கலந்து கொண்டனர்.தேர்ந்தெடுக்கப்பட்ட மணமக்களுக்கு செண்டை மேளம் முழங்க உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கபட்டது. மத நல்லிணக்கதை வெளிப்படுத்தும் விதமாக ஒரே இடத்தில் இந்துக்கள்,இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்களை சார்ந்த 23 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.இந்து மதத்தை சேர்ந்த ஆறு ஜோடி மணமக்கள்,கிறிஸ்த மதத்தை சேர்ந்த மூன்று ஜோடிகள் மற்றும் பதினான்கு ஜோடி இஸ்லாமியர்களுக்கு அவரவர் முறைப்படி திருமணம் செய்து வைக்கபட்டது.
திருமணம் செய்து வைக்கபட்ட 23 ஜோடிகளுக்கும் இரண்டு லட்சம் மதிப்பிலான கட்டில்,மெத்தை,பீரோ, பாத்திரங்கள்,மளிகை சாமான்கள் 10 கிராம் தங்கம் சீர்வரிசையாக தரப்பட்டது.ஒவ்வொரு மதத்தவருக்கும் அவரவர் மதங்களின் வழிகாட்டுதலாக இருக்கும் குர்ஆன்,பைபிள்,பகவத் கீதை புத்தகம் தரப்பட்டது. திருமண விழாவில் பங்கேற்ற 2000 பேருக்கும் அசைவு உணவு பரிமாறப்பட்டன.வறுமையில் வாடிய ஏழை எளிய பெண்களுக்கு வாழ்வில் மிக முக்கியமான தருணத்தை ஏற்படுத்தித் தந்த அமைப்பினருக்கு மணமக்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மனதார அவர்களை பாராட்டினர்.