கும்பகோணத்தில் அனைத்து சங்க தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் அரசுபோக்குவரத்து நிர்வாக இயக்குனரின் சர்வதிகார போக்கை கண்டித்து கும்பகோணத்தில் அனைத்து சங்க தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து திருச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, கும்பகோணம், நாகை மண்டலங்களில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களில் தொழிலாளர்கள் ஏராளமானோர் பெருந்திரல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் மண்டல சிஐடியு பொதுச் செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். கும்பகோணத்தில் அரசு போக்குவரத்துக் கழக தலைமை இடமாக இயங்கி வருகிறது அதில் நிர்வாக இயக்குனராக மகேந்திர குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார் ஆனால் அவர் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அனைத்து பணியாளர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தையும் அவதூராக கிளைகளில் செல்லும்போது பேசி வருகிறார்.
கோடைகால வெயில் கடுமையாக உள்ள நிலையில் அனைத்து நகர் பேருந்துகளையும் புல் ஷிப்டாக இயக்க கட்டாயப்படுத்தியும் நடத்துனர்கள் முன் இருக்கையில் அமரக்கூடாது எனவும், தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும் போது தன்னிச்சையாக வாய்மொழி உத்தரவு மூலம் பணி நிலைமைகளை மாற்றம் செய்தும், கிளைகளின் எண்ணிக்கை குறைப்பதும் பயிற்சி மையங்களை எண்ணிக்கையை குறைப்பதும், புதுகை மண்டல டயர் புதுப்பிக்கும் பிரிவை மூடிவிட்டு திருச்சி மண்டலத்துடன் இணைப்பதும் போன்ற தொழிலாளர்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறார் மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாற்றுப் பணி பார்த்து வந்த ஓட்டுநர் நடத்துனருக்கு பணி வழங்காமல் நிறுத்தி வைப்பது அவர்களால் செய்ய முடியாத வேலையை செய்ய சொல்லி நிர்பந்திப்பது செய்ய முடியாவிட்டால் வேலையை விட்டு போகும்படி மிரட்டுவது மருத்துவ விடுப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு கையிருப்பில் இருக்கும் பொது ஈட்டிய விடுப்பை கழிப்பது சம்பள பட்டுவாடா சட்டத்திற்கு எதிராக சம்பள சிலிப்பில் உள்ள விடுப்பு விவரங்களை நீக்குவது நடத்துனர்களை திருடர்கள் போல் பாவித்து கேஸ் பேக்கை வழி தடத்தி ஆய்வு செய்ய உத்தரவு போடுவது போன்ற தொழிலாளர்களுக்கு எதிராக எல்லாவித அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து வரும் கும்பகோணம் நிர்வாக இயக்குனரின் சர்வாதிகார போக்கை கைவிடவும் தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.