அல்லாலிகவுண்டனூரில் கனமழையால் பாதிப்பு:எம்எல்ஏ நேரில் ஆய்வு

அல்லாலிகவுண்டனூரில் கனமழையால் பாதிப்பு:எம்எல்ஏ நேரில் ஆய்வு

நேரில் ஆய்வு செய்த எம்எல்ஏ

அல்லாலி கவுண்டனூரில் பெய்த கனமழையால், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்த கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் கொளுத்தி எடுத்தது. இதற்கு இணையாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை மையம் அறிவிப்பு செய்து இருந்தது. நேற்று மாலை 4:30 மணி அளவில் பெய்த மழை நள்ளிரவு வரை தொடர்ந்தது. மாவட்டத்தில் மொத்தம் 602.2 மில்லி மீட்டர் பெய்துள்ளது.

இதில் கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதியில் மட்டும் 79 மில்லி மீட்டர் மழை பெய்தது. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாக உள்ளது. இப்பகுதியில் பெய்த கனமழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து இருந்த போதும், பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் வசித்த பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் வெள்ளம் போல் வீடுகளுக்குள் புகுந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர், இதனை அறிந்த கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அல்லாலி கவுண்டனூர் பகுதியில் கட்டப்பட்டிருந்த சிறு தடுப்பணை உடைந்து, தடுப்பணையில் தேங்கிய மழைநீர் அனைத்தும் அருகில் உள்ற குளத்திற்கு சென்று விட்டது. அவ்வாறு சென்ற நீர் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்ததால் பொதுமக்கள் வீட்டிற்குள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக அவர்களுக்கு ஜெகதாபி ஊராட்சி நிர்வாகம் சார்பில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு,

மழை நீர் வெளியேறுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்த பிறகு தடுப்பணை சீர் செய்யப்படும் எனவும், தாழ்வான பகுதியில் வசிப்பவர்களுக்கு மழை நீர் தேங்காத வகையில் மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என எம்எல்ஏ சிவகாமசுந்தரி பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியின் போது திமுக தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், ஜெகதாபி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story