விராலிமலை ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் குற்றச்சாட்டு

விராலிமலை ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் குற்றச்சாட்டு

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை என விராலிமலை ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

விராலிமலை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் காமுமணி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் லதா வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய பொது செயல் செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ராஜாளிபட்டி ஊராட்சியில் சாலை அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை விரைவில் சாலை பணியை தொடங்கி முடிக்க வேண்டும் விராலிமலையில் அரசு மருத்துவமனை முன்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புறம் கோரிமேடு கடைவீதி புதிய பஸ் நிலையம்,

ஆகிய இடங்களில் அமைந்துள்ள உயர் கோபுரம் மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை அதை சீரமைக்க வேண்டும். விராலிமலை பொது மயானத்தின் அருகே இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வரும் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றன.

கொடும்பாளூர் அரசு மருத்துவமனை அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். கத்தலூர் ஊராட்சி, கவண்டம்பட்டி தார் சாலை, வேலூர் புதுப்பட்டி தார் சாலை, கருத்தங்கள் பட்டி, தேராவூர் தார் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிதலமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Tags

Next Story