குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர்
அதிமுகவினர்
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி என் மீது வைத்துள்ள குற்றச்சாட்டை 24 மணி நேரத்திற்குள் நிரூபிக்காவிட்டால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் .சி. விஜயபாஸ்கர் பேட்டி புதுக்கோட்டையில் நேற்று திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது,
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காவிரியில் இருந்து புதுக்கோட்டைக்கு வரும் காவிரி குடிநீரை வழிமறித்து தன்னுடைய வயலுக்கும் தன்னுடைய கல்லூரிக்கும் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டை செய்தியாளிடம் தெரிவித்திருந்தார் இதனை அடுத்து இன்று .
தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி .விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது என் மீது ரகுபதி வைத்துள்ள குற்றச்சாட்டை 24 மணி நேரத்தில் நிரூபிக்க தயாரா? அப்படி நிரூபிக்கவில்லை என்றால் தன்னுடைய மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பேட்டியளித்தார். முன்னதாக தமிழகம் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி .விஜய்பாஸ்கர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீது காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.