SIHS காலனியில் திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டு

SIHS காலனியில் திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு வைத்த மக்கள்

SIHS காலனியில் திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை SIHS காலனி உள்ள அண்ணாநகர் இட்டேரி பகுதியில் பொதுமக்கள் 40 ஆண்டுகளாக அடிப்படை வசதி சாலை வசதிகள் இல்லாமல் கொசுக்கடியில் வாழ்ந்து வருவதாகவும் மக்கள் எவ்வாறு சிரமப்படுகிறார்கள் என்று சாக்கடையில்,

இறங்கி மக்களின் பிரச்சனையை பற்றி பேசிய பாஜக சிங்காநல்லூர் தொகுதி பொறுப்பாளர் ஜான் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மக்களவைத் தேர்தலை ஒட்டி கோவை SIHS காலணியில் திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருவதாகவும் 40 ஆண்டுகளாக அடிப்படை வசதி கூட இல்லாமல் இப்பகுதி பொதுமக்கள் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

திமுகவினர் ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுப்பதாகவும் அதனை ஆண்கள் பெற்றுக் கொண்டு டாஸ்மார்க் சென்று செலவு அளித்து வருவதாக கூறியவர் திமுகவினர் பணம் கொடுப்பதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் பெண்களிடம் வந்து மதுபாட்டில்களை கொடுத்தால் உபயோகமாக இருக்கும் என்று விமர்சனம் செய்தார். திமுகவினர் கொள்ளையடித்து ஓட்டுக்கு 500 ரூபாய் பணம் கொடுப்பது திமுகவிற்கு கேவலம் என்றும் ஓட்டுக்கு திமுகவினர் 5000 கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கடந்த 10 ஆண்டுகளாக இருந்த கோவை மக்களவைத் தொகுதி எம்பிக்கள் பொதுமக்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதி செய்து தரவில்லை என்றும் கூறினார். அண்ணாமலை கண்டு திமுகவினர் பயந்து ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்றும்,

திமுக ஊழல் செய்து பல ஆயிரம் கோடி மக்கள் பணத்தை சம்பாதித்து வைத்துள்ளதாகவும் இன்று மட்டும் தமிழகத்தில் மக்களின் 56.5 கோடியை தேர்தல் அதிகாரிகள் பிடித்துள்ளனர் என்றார். பிரதமர் மோடி நல்ல முறையில் ஒரு தலைவராக விளங்குவதால் மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story